கொழும்புக்கு வர முயன்ற மாணவர் பேரணி களனியில் கலைப்பு, 7 பேர் கைது – படங்கள் இணைப்பு

0
92

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி களனி பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (18) முன்னெடுக்கப்பட்ட மாணவர் பேரணியை பல்கலைக்கழகத்திற்கு அருகில் வைத்து பொலிஸார் கலைத்தனர்.

7 மாணவர்களை பொலிசார் கைது செய்தனர்.

பல்கலைக்கழக மாணவர் பேரவையின் ஏற்பாட்டில் இந்த எதிர்ப்பு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.

மாணவர் ஊர்வலம் கொழும்புக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் கண்டி வீதியில் களனி ட்ரையர் சந்தியை அண்மித்த பகுதியில் பெருமளவான பொலிசார் குவிக்கப்பட்டிருந்ததோடு, அருகிலேயே தண்ணீர் பீரங்கிகளும் நிறுத்தப்பட்டிருந்தன.

ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் கலைத்ததையடுத்து, களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here