இலங்கையில் அரிசி தட்டுப்பாடா?

Date:

அரிசி கையிருப்பை மறைத்து அரிசி தட்டுப்பாடு இருப்பதாக வியாபாரிகளும் விவசாயிகளும் நாடகமாட முயற்சிப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

புத்தளம் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், எந்த அளவான அரிசி கையிருப்புகளை மறைத்து வைத்தாலும் கட்டுப்பாட்டு விலைக்கு மேல் அரிசியை விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.

“எங்களுக்கு அரிசி தட்டுப்பாடு இல்லை. இந்த போகத்தில் போதிய அறுவடை கிடைத்துள்ளது என்பது வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் தெரியும். இதை, ஐந்து மாதங்களுக்கு பயன்படுத்த முடியும் என்பதால், விவசாயிகள் வீடுகளில் வைத்துள்ளனர். மேலும் ஆலை உரிமையாளர்கள் இவற்றை ஆலைகளில் வைத்துள்ளனர். அதனால்தான் இந்த சிறு பற்றாக்குறை உருவாகிறது. ஆனால் நாட்டுக்குத் தேவையான அரிசியின் அளவு.. அதாவது நம் அனைவருக்கும் தேவையான அரிசி இருக்கிறது. பாஸ்மதியை வௌிநாட்டில் இருந்து கொண்டு வர வேண்டும். கீரி சம்பாருக்கு ஓரளவு தட்டுப்பாடு உள்ளது.
மேலும் மற்றைய அரிசி வகைகள் போதுமான அளவு உள்ளன.
மேலும், எவ்வளவு மறைத்தாலும் சாதாரண நிலை அரிசி கட்டுப்பாட்டு விலையை தாண்டி செல்ல அனுமதிக்க மாட்டோம். அது கட்டுப்பாட்டு விலைக்கு கீழே பராமரிக்கப்படும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து சர்வதேச...

ஐக்கிய மக்கள் சக்தி செய்த வரலாற்று பிழை!

அமைச்சர் விஜித ஹேரத்தின் பாராளுமன்ற உரை - 2025.11.14 அரசியல் மற்றும் பொருளாதார...

புப்புரஸ்ஸ பகுதியில் 16 வயது மாணவி படுகொலை!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ மில்லகாமுல்ல காசல்மில்க் பகுதியில் 16 வயது...