கோட்டாவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

0
151

மக்கள் இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள் இருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் யாழ்.நீதிவான் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கின் சாட்சியாளராக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அழைக்க முடியாது என்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யுமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

லலித் குமார் வீரராஜு மற்றும் கூகன் முருகானந்தன் ஆகியோர் 2011 ஆம் ஆண்டு பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு இன்று (19) நோட்டீஸ் அனுப்பி மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

காமினி அமரசேகர, யசந்த கோதாகொட மற்றும் ஏ. எச். எம். டி. நவாஸ் உச்ச நீதிமன்ற அமர்வு முன் அழைக்கப்பட்ட போது கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மனுதாரரின் சட்டத்தரணி நுவான் போபகே நீதிமன்றில் தெரிவித்தார்.

ஆனால் கோட்டாபாய ராஜபக்சவுக்காக எந்த சட்டத்தரணியும் நீதிமன்றில் ஆஜராகவில்லை.

அதன்படி, மனுதாரருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்புமாறு மனுதாரரின் வழக்கறிஞருக்கு அறிவித்த நீதிபதிகள் மனுவை மீண்டும் டிசம்பர் 15-ம் திகதிக்கு அழைக்கும்படி உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here