விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பதவிக்காலம் நீடிப்பு

0
18

நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தியின் போது ஏதேனும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்பாடுகள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலமே இந்த கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ பதவிக் காலம் கடந்த 16 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையிலேயே, மேலும் இரண்டு மாத காலத்துக்கு இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here