டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

0
190

தற்போது நாடளாவிய ரீதியில் 67,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த மாதத்தில் 2500க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு அபாய வலயங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில், கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்,அவற்றில் கொழும்பு மாவட்டம் மிகவும் ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு மாநகர சபை எல்லை, கொதட்டுவ, நுகேகொட மற்றும் மஹரகம ஆகிய பகுதிகளில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் கம்பஹா, அத்தனகல்ல, பைகம, களனி மற்றும் வத்தளை பிரதேசங்களிலும் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை மற்றும் பேருவளை பிரதேசங்களிலும் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு காணப்படுவதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன மேலும் தெரிவிக்கின்றார்.

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து சுற்றுப்புறத்தை தூய்மையாக பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மக்களை மேலும் கேட்டுக் கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here