யானை தாக்கி பெண் பலியானதால் பிரதேசவாசிகள் தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர் பலி!!

Date:

அநுராதபுரம் கெப்பத்திகொல்லேவ பகுதியில் பொலீஸ் அதிகாரி ஒருவரை கிராம மக்கள் பொல்லால் அடித்துக் கொன்றனர்.

நேற்று பிற்பகல், கபிதிகொல்லேவ, ரம்பகேபூவெவ பகுதியில் வைத்து தாக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.

வாரியபொல பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடைய இவரின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று மதியம் காட்டு யானை தாக்கியதில் உள்ளூர் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், பிரதேசவாசிகள் வீதியைக் மறித்து செய்த போராட்டத்தை கட்டுப்படுத்தச் சென்ற போது, ​​பொலிஸ் பரிசோதகர் மற்றும் மேலும் இரு உத்தியோகத்தர்கள் மீது பொல்லால் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரியை காப்பாற்ற வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக பொலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிக்கு உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...