பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக வழக்கு விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு அல்லது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட கைதிகளை நீதிமன்றம் ஊடாக பிணையில் விடுவித்துக் கொள்வதற்கு சாதகமான சட்ட திருத்தம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ் இந்த பயங்கரவாத தடை சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு திருத்தம் செய்யப்பட்ட சட்டமானது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன் அதில் மிகவும் தெளிவான விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது இதற்கு முன்னர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்கள் வழக்கு விசாரணைகள் எதுவும் இன்றி காலவரையற்ற வகையில் தடுத்து வைக்கப்பட்டு வருகின்றனர்.
இப்போது அந்த ஏற்பாட்டில் திருத்தம் செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நபர் ஒருவர் 12 மாதங்கள் அதாவது ஒரு வருடங்கள் கடந்த பின்னரும் வழக்கு விசாரணை இழுத்தடிக்கப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாது தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பாராயின் அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நபர் தன்னுடைய சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் தன்னை பிணையில் விடுதலை செய்வதற்கான கோரிக்கையை முன்வைக்க முடியும்.
அவ்வாறான ஒரு கோரிக்கை முன்வைக்கப்படும் போது அந்த கோரிக்கையின் அடிப்படையில் சாதகமான காரணங்கள் காணப்படும் விடத்து குறித்த சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்வதற்கான அதிகாரம் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல வருட காலங்களாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட அனைத்து கைதிகளும் தங்களை பிணையில் விடுவித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை இந்த சட்ட திருத்தத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும்.
பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இலங்கை அரசாங்கத்திற்கு தொடர் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச நான் என் இதயத்தின் உதவியை பெற சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் நன்மதிப்பை பெற இலங்கை அரசாங்கம் முன்வந்து இவ்வாறான ஒரு சட்ட திருத்தத்தை செய்திருப்பதாக அறிய முடிகிறது.
பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்காது அதில் சிறு சிறு தவறுகளை மேற்கொண்டு அதனூடாக அதனை வலுவிழக்கச் செய்யும் நகர்வில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக அரசியல் விமர்சனங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சட்ட திருத்தம் தொடர்பில் மனித உரிமை சட்டத்தரணிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக சிவில் செயற்பாட்டாளர்களின் விளக்கங்களையும் கருத்துக்களையும் ‘லங்கா நியூஸ் வெப்’ இணைய செய்திகளில் தொடர்ந்து எதிர்பாருங்கள்.
பயங்கரவாத தடை சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தின் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.