கிரிக்கெட் சபைக்கு எதிரான பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்

0
93

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உட்பட நிர்வாக சபையை நீக்குதல் மற்றும் புதிய கட்டமைப்பைப்பொன்றை அனுமதிக்கும் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்றது.

எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட அந்த பிரேரணை சபையில் இருந்தவர்களால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

எனினும், அந்த சந்தர்ப்பத்தில் ஜே.வி.பி எம்.பிக்கள் எவரும் சபையில் இருக்கவில்லை என்பதுடன் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வருகை தரவில்லை என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here