நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நெடுந்தீவுக்கு விசேட படகு சேவைகள்

Date:

நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தீவுப் பகுதிகளுக்கான விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று யாழ். மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

நெடுந்தீவில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கான படகுச் சேவைகளின் அடிப்படையில், குறிகட்டுவான் காலை 8.00 மணிக்கு வடதாரகைப் படகும், 8.15 மணிக்கு சமுத்திரதேவா படகும், 11.30 மணிக்கு குமுதினிப் படகும், பிற்பகல் 1.00 மணிக்கு கரிகணன் படகும், 2.30 மணிக்கு குமுதினிப் படகும், மாலை 4.00 மணிக்கு சமுத்திரதேவா படகும், மாலை 5.30 மணிக்கு வடதாரகை படகும் நெடுந்தீவு துறைமுகத்துக்குச் செல்லவுள்ளன.

அதேபோன்று நெடுந்தீவு துறைமுகத்தில் இருந்து காலை 6.45 மணிக்கு வடதாரகைப் படகும், 7.00 மணிக்கு சமுத்திரதேவா படகும், 10.30  மணிக்கு குமுதினிப் படகும், 11.30 மணிக்கு கரிகணன் படகும், பிற்பகல் 1.00 மணிக்கு குமுதினிப் படகும், 3.00 மணிக்கு சமுத்திரதேவா படகும், மாலை 4.30 மணிக்கு வடதாரகைப் படகும் குறிகட்டுவான் துறைமுகத்துக்குப் பயணிக்கவுள்ளன.

அத்துடன், நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவுப் பகுதிகளுக்கான விசேட கடற்போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு உரிய பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றும் யாழ். மாவட்ட அரச அதிபர் கூறினார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இருந்து இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவை ஆகியவற்றின் போக்குவரத்து ஒழுங்குகளும் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் யாழ். மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மேலும் குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய...

மழை தொடரும்

நாட்டின் கிழக்குப் பகுதியில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை,...

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...