இலங்கையில் பலம் வாய்ந்த அரசாங்கம் – பொதுத் தேர்தல் குறித்த முழுமையான பார்வை

0
256

நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மகத்தான வரலாற்று வெற்றியை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களில் 21 தேர்தல் மாவட்டங்களை தேசிய மக்கள் சக்தி வெற்றிகொண்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தை இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றிக்கொண்டது. அதேபோன்று தபால்மூலமான வாக்களில் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தியே வெற்றி பெற்றிருந்தது.

தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 40 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 8 ஆசனங்களையும் புதிய ஜனநாயக முன்னணி 5 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 ஆசனத்தையும், ஐக்கிய தேசியக் கட்சி 1 ஆசனத்தையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1 ஆசனத்தையும், சர்வஜன அதிகாரம் 1 ஆசனத்தையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 1 ஆசனத்தையும், இலங்கை தொழிலாளர் கட்சி 1 ஆசனத்தையும், சுயாதீனக் குழு-17 1, ஆசனத்தையும் கைபற்றியுள்ளன.

29 தேசிய பட்டியல் ஆசனங்களில் தேசிய மக்கள் சக்தி 18 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 5 ஆசனங்களையும், புதிய ஜனநாயக முன்னணி 2 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 1 ஆசனத்தையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும், சர்வஜன அதிகாரம் கட்சி 1 ஆசனத்தையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 1 ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன.

நாடாளுமன்றத் தேர்தல் பொலிஸார் மற்றும் முப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் வியாழக்கிழமை இடம்பெற்றது. தேர்தலில் 65 சதவீதமான வாக்கு பதிவாகியிருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் நாடாளுமன்றத் தேர்தலில் குறைவான வாக்கு சதவீதமே பதிவானதுடன், வாக்களிப்பும் மந்தமாகவே இருந்தது.

22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 160 தொகுதிகளில் 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்ததுடன், வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் வாக்களிப்பு நடைபெற்றது.

2023ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடைபெற்ற இத்தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடியே 71இலட்சத்து 40ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

மொத்தமாக 11,148,006 பேர் தமது வாக்குகளை அளித்திருந்தனர். இதில் 667240 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக பதிவானதுடன், 11, 815, 246 செல்லுப்படியாகும் வாக்குகள் பதிவாகியிருந்தன.

வாக்களிப்பின் போது எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறாது அமைதியான முறையில் தேர்தல் நடந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

பெறுபேறுகளின் பிரகாரம் 22 தேர்தல் மாவட்டங்களிலும் தபால் மூல வாக்களிப்பில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியே வெற்றிபெற்றது. பிரதான வாக்களிப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர்த்து ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தியே வெற்றிபெற்றது.

அளிக்கப்பட்ட மொத்த வாக்கில் தேசிய மக்கள் சக்தி 6,863,186 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 19,627,16 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணி 500,835 வாக்குகளையும், இலங்கை தமிழரசுக் கட்சி 257,813 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 350, 429 வாக்குகளையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 87,038 வாக்குகளையும், சர்வஜன அதிகாரம் 178,006 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 66, 234 வாக்குகளையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 65,382 வாக்குகளையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 39,894 வாக்குகளையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 33,911 வாக்குகளையும், சுயேச்சைக் குழு 17 (யாழ்ப்பாணம்) 27,855 வாக்குகளையும், இலங்கை தொழிலாளர் கட்சி 17,710 வாக்குளையும் பெற்று ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here