நோர்வூட் பிரதேச சபையின் உப தவிசாளராக இ.தொ.கா உறுப்பினர் ரெங்கசாமி காமராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இந்த பதவியில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர் இருந்தார்.
இந்நிலையில் புதிய உப தவிசாளருக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழ்த்து செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்
“நோர்வூட் பிரதேச சபையின் உப தவிசாளராக இ.தொ.கா. உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா விற்கு மக்கள் அதிக வாக்குகளை அளித்திருந்ததும், சூழ்ச்சியால் எதிரணியினரே சபையை அமைத்தனர்.
இந்நிலையில் இன்று நோர்வூட் பிரதேச சபை இ.தொ.கா. வசம் வந்துள்ளது. அதற்கு சிறந்த ஒரு பழமொழி தான் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்பது. நோர்வூட் பிரதேச சபையால் மூன்று வருடங்களாக முன்னெடுக்கபடாத வேலைத்திட்டங்களை இ.தொ.கா உப தவிசாளர் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்“ என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும் இ.தொ.காவின் உறுப்பினர்களுக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.



