மாவீரர் வாரம் ஆரம்பம் – துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு

0
248

ஈழத் தமி­ழர்­க­ளின் உரி­மைக்­காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ். தீவகம் – சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் வருடந்தோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது,

அந்தவகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தலைத் தமிழ் மக்கள் வாழும் இடங்களில் நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது,

இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தீவகம் – சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில்  மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி,  உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here