எதிர்வரும் வருடத்தில் ஜனாதிபதித் தேர்தலும் பாராளுமன்ற பொதுத் தேர்தலும் நிச்சயமாக நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகின்றார்.
அதன் பின்னரே எஞ்சியுள்ள தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை ஆற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வாக்களித்தவர்களுக்கும், தனக்கு ஆதரவளிக்காதவர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.