வட்டுக்கோட்டையில் உயிரிழந்த கைதியின் மரணம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு!

Date:

வட்டுக்கோட்டை பொலிசாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் இளைஞரின் மரணம் தொடர்பில், வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நீதவான், யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு நேரில் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

அதேநேரம் உயிரிழந்த இளைஞனுடன் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞனிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக நாளை மறுதினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்ற 26 வயதுடைய இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை உயிரிழந்தார்.

இளைஞரின் சடலம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனைகள் நேற்று முன்தினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அதன்போது, நீதவான் வைத்தியசாலைக்கு நேரில் சென்று சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து சிறைச்சாலைக்கு நேரில் சென்று சிறைச்சாலை அத்தியட்சகர், உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களிடமும் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டார். இதேவேளை உயிரிழந்த இளைஞருடன் கைதான மற்றைய இளைஞர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பிக்களுக்கான மேலும் ஒரு சலுகை ரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள...

அச்சத்தில் கோயில் கோயிலாக செல்லும் அரசியல்வாதிகள்!

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையின் போது...

31 கோடி பெறுமதி போதை பொருட்கள் மீட்பு

சீதுவ பகுதியில் உள்ள ஒரு தனியார் அஞ்சல் சேவை நிலையத்தில் சுங்க...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...