வட்டுக்கோட்டையில் உயிரிழந்த கைதியின் மரணம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு!

Date:

வட்டுக்கோட்டை பொலிசாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் இளைஞரின் மரணம் தொடர்பில், வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நீதவான், யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு நேரில் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

அதேநேரம் உயிரிழந்த இளைஞனுடன் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞனிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக நாளை மறுதினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்ற 26 வயதுடைய இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை உயிரிழந்தார்.

இளைஞரின் சடலம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனைகள் நேற்று முன்தினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அதன்போது, நீதவான் வைத்தியசாலைக்கு நேரில் சென்று சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து சிறைச்சாலைக்கு நேரில் சென்று சிறைச்சாலை அத்தியட்சகர், உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களிடமும் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டார். இதேவேளை உயிரிழந்த இளைஞருடன் கைதான மற்றைய இளைஞர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்...

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை...

உடனடியாக டொலர் அனுப்புமாறு அமைச்சர் கோரிக்கை

டொலரின் மதிப்பு இன்னும் உயரலாம் என எதிர்பார்த்து வெளிநாட்டு நாணயத்தை வைத்திருக்காமல்,...

200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை

இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.  நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில்...