இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் சுகயீனமுற்றிருந்த நிலையில் தனது 79ஆவது வயதில் இன்று காலை காலமானார்.
சிவலிங்கம் 1943 ஜூலை மாதம் 19ம் நாள் உடப்புசல்லாவ மேல் தோட்டத்தில் பிறந்தவர். உடப்புசல்லாவ றப்பானை தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்னர் நுவரெலியா புனித திரித்துவக் கல்லூரியிலே உயர்கல்வி பெற்றார். துடிப்பான இளைஞராக இருந்த முத்து சிவலிங்கம் தொழில் செய்ய 1962 மார்ச் 15ம் திகதி தலவாக்கலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காரியாலய எழுதுவினைஞராகப் பதவி பெற்றார்.
முதன் முறையாக நுவரெலியா- மஸ்கெலிய தேர்தல் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார். 28 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். காத்திருப்பு பட்டியலிலிருந்து எம். பியானார்.
1994ம் ஆண்டு நுவரெலிய- மஸ்கேலிய தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு 86,500 வாக்குகளைப் பெற்றார்.