அரசியலமைப்பு பேரவை ஒன்றும் ஐதேக செயற்குழு அல்ல

0
44

பொலிஸ் மா அதிபர் மற்றும் பல நீதியரசர்களை நியமிக்க அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ள நிலையில், அரசியலமைப்பு பேரவை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அல்ல என்பதை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்த விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபர் நியமனத்திற்காக ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பெயர்கள் 2 தடவைகள் அங்கீகரிக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்ட போதிலும் இரண்டாவது நியமனம் வழங்கப்படும் போது மூன்றாவது நியமனம் நிரந்தர நியமனம் என தெளிவாக கூறப்பட்டு அதன் பின்னர் ஜனாதிபதி அதனை நிராகரித்துள்ளார்.

அனுப்பப்பட்ட தற்காலிக பெயர்கள் மற்றும் அரசியலமைப்பு பேரவை குழப்பத்திற்கு எந்த வகையிலும் பொறுப்பல்ல என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான விடயங்களை முன்வைத்து ஜனாதிபதி நாட்டை தவறாக வழிநடத்துவது பொருத்தமானதல்ல, கரு ஜயசூரிய சபாநாயகராக இருந்த போது அவ்வாறான அவசர நியமனங்களை செய்யவில்லை.

இந்த தீர்மானங்களை நாட்டின் தோல்வியாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும், அரசியல் யாப்பு பேரவை என்பது வயல்வெளிக்கு நடுவில் உள்ள ஆடு அல்ல எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக தெரிவுக்குழுவொன்றை நியமித்த போதும், பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியவர்கள் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய இதுவரை தெரிவுக்குழுவை நியமிக்க இந்த அரசாங்கத்தினால் முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here