இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்புக்களுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கையர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டம் இருப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
காசா பகுதிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட இடங்களுக்கு இந்த இலங்கையர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதாக ஹக்கீம் குற்றம் சாட்டினார்.
இவ்வாறு இஸ்ரேல் சென்று ஆயுத பயிற்சி பெறுவோர் மூலம் நாட்டில் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கவனம் செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதில் அளித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் இலங்கை பணியாளர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள இந்த இனவாத கருத்தை கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.