மஹவ-யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவை ஐந்து மாதங்களுக்கு இடைநிறுத்தம்!

0
137

2023 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மஹவவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (28) காலை பாராளுமன்ற அமர்வின் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர், புகையிரத பாதைகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த பாதையில் புகையிரதங்கள் இயங்காது என விளக்கமளித்தார்.

“ரயில் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு ஓடியது, தற்போது புகையிரத பாதைகள் சீர் செய்யப்படாமையால் மஹவைக்கு அப்பால் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐந்து மாதங்களில் திருத்தம் செய்து முடிக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here