தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நெல் ஆலை உரிமையாளர்களை மீண்டும் பதிவு செய்வது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
இதன்படி, பிரதேச செயலக மட்டத்தில் வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
நெல் கொள்வனவு நடவடிக்கைகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக புதிய நெல் ஆலை உரிமையாளர்களின் பதிவுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் பேச்சாளர் அத தெரணவிடம் தெரிவித்தார்.
சரியான நேரத்தில் செய்தித்தாள் விளம்பரத்தில் அறிவிக்கப்பட்ட பிறகு பதிவு நடைமுறை மீண்டும் தொடங்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
N.S