சுற்றுலா விசாவில் வெளிநாடுகளில் பணிக்கு பிரஜைகளை அனுப்பிய அல்லது பதியப்படாத 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (டிசம்பர் 03) பாராளுமன்றத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாயக்கர இதனைத் தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் உரிமையாளர்களை கட்டுப்படுத்துவதற்கு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இறுக்கமான நடவடிக்கைகள் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார்.
இலங்கைக்குள் டொலர்களை கொண்டு வருவதற்கு மாறாக Undial பணப்பரிமாற்ற முறையின் ஊடாக கொமிஷனை பெற்ற முகவர் நிறுவனங்களுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
முகவர் நிலையங்களை நடத்துவதற்கான அனுமதிகள் முன்னர் ரூ.700,000க்கு வழங்கப்பட்டிருந்தன. எதிர்காலத்தில் 3,000,000ஆக அதிகரிக்கப்படும்.
N.S