பொலிஸ் அராஜகத்துக்கு முடிவு கட்டுங்கள்- ஜனாதிபதியிடம் சஜித் வலியுறுத்து

0
206

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“பொலிஸார் தாம் நினைத்த மாதிரி செயற்படலாம் என்ற மனோநிலையில் இருக்கின்றார்கள்.

சந்தேகநபர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை மேற்கொள்கின்றார்கள். தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கில் பொலிஸாரின் இந்த அத்துமீறல் செயல்கள் தலைவிரித்தாடுகின்றன.

இதனால் அங்கு அப்பாவி மக்களின் உயிர்களும் பறிக்கப்படுகின்றன.

பொலிஸ்மா அதிபர் விவகாரத்தைக் கையிலெடுத்து அரசியல் செய்யும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொலிஸாரின்  இந்த அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here