Sunday, May 19, 2024

Latest Posts

இலங்கையில் மீண்டும் காற்று மாசுபாடு அதிகரிப்பு

இன்று (டிசம்பர் 10) காலை 08 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய காற்றுத் தரச் சுட்டெண் (AQI) இன் படி, இலங்கையின் சில பகுதிகளில் காற்று மாசுபாட்டில் அதிகரிப்பு காணப்பட்டது.

துகள்கள் (PM2.5 மற்றும் PM10), ஓசோன் (O3), நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2), சல்பர் டை ஆக்சைடு (SO2) மற்றும் கார்பன் மோனாக்சைடு (CO) உமிழ்வுகளின் அளவீட்டின் அடிப்படையில் இந்த அதிகரிப்பு கணிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்புக்கு நேற்று (டிசம்பர் 09) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும், இன்று சிவப்பு எச்சரிக்கை காற்று மாசு அளவு 191 ஐ பதிவு செய்துள்ளது.

அதேபோன்று கேகாலை மற்றும் பதுளை பகுதிகளுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், களுத்துறை, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“08:00 மணி நேரத்திற்கான PM2.5 ஐப் பொறுத்தமட்டில் காற்றுத் தரக் குறியீட்டு நிலை கொழும்பு, கேகாலை, பதுளை ஆகிய இடங்களில் ஆரோக்கியமற்ற நிலையைக் குறிக்கிறது.

குருநாகல், கண்டி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, களுத்துறை ஆகிய இடங்களில் உணர்திறனும் ஆரோக்கியமற்றது. யாழ்ப்பாணம், காலி, நுவரெலியா, அம்பாந்தோட்டை, பொலன்னறுவை ஆகிய இடங்களில் மிதமான நிலை மற்றும் ஏனைய நகரங்களில் நல்ல நிலையில் உள்ளதாக NBRO அறிக்கை கூறுகிறது.

நாட்டில் குறைந்த காற்றின் தரம் காரணமாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாசக் கோளாறுகள் மற்றும் ஒவ்வாமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நேரம் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் வெளியில் செல்லும்போது முகக்கவசங்க;ளை அணியுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நேற்று, இலங்கையின் காற்றின் தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது, இது தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் (NBRO) வளிமண்டல மாசுபாடு படிப்படியாக நீங்கி வருவதாக கூறியுள்ளது.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.