தமிழ்நாட்டை சேர்ந்த 25 மீனவர்கள் கைது

Date:

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்கள் 25 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி அவர்களை கைது செய்து இருக்கிறார்கள். பல்வேறு படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது ஒரு படகு எல்லை தாண்டியதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இந்த மீனவர்களை இலங்கை கடற்படை அதிகாரிகள், காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். காலை 9 மணிக்கு தமிழக மீனவர்கள் அந்த முகாமில் அடைத்து வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் அங்கே மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் போது, வந்த கடற்படை அதிகாரிகள், எல்லை மீறி நீங்கள் மீன் பிடிக்கிறீர்கள் என்று கூறி இவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. அதோடு இவர்களின் வலைகளை அங்கேயே அறுத்ததாகவும் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...