யாழில் ஊடகவியலாளரின்வீடு புகுந்து மிரட்டிய கும்பல்- பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

0
149

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டுக்குக் கும்பல் ஒன்று சென்று மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளது என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு நேற்று மாலை, ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 6 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் அடங்கிய கும்பல், தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தன்னைத் தாக்க முற்றப்பட்டபோது, அயலவர்கள் கூடியமையால் தாக்குதல் முயற்சியை கைவிட்டு, மரண அச்சுறுத்தல் விடுத்து விட்டு, அந்தக் கும்பல் அங்கிருந்து சென்றது என்று பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் கும்பல் தொடர்பான செய்தி ஒன்று இணையத்தள ஊடகம் ஒன்றில் வெளியாகி இருந்த நிலையில், அதனை அகற்றக் கோரியே அந்தக் கும்பல் மிரட்டியது என்று பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here