சஜித் – டலஸ் பிளவு, பீரிஸுடன் ஜனவரியில் புதிய கூட்டணி

Date:

எதிர்வரும் ஜனவரி மாதம் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பிரதமர் வேட்பாளரை ஜி.எல். பீரிஸுக்கு வழங்குவதற்காக சமகி ஜன பலவேகவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஜி.எல். பீரிஸ் மற்றும் நாலக கொடஹேவா உள்ளிட்டோர் இணக்கம் தெரிவித்த நிலையில், டலஸ் அழகப்பெரும உள்ளிட்டோர் சுதந்திர மக்கள் பேரவையிலிருந்து வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, சுதந்திர ஜனதா சபையின் உரிமையாளரான நாலக கொடஹேவா எதிர்காலத்தில் சுதந்திர ஜனதா சபையை கலைத்துவிடுவார் அல்லது சமகி ஜனபலவேக கூட்டணியில் இணையவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

டலஸ் அழகப்பெரும, சரித ஹேரத் உள்ளிட்டோர் எதிர்காலத்தில் வேறு அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மழை தொடரும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

சங்கீத்சன் பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர்...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...