மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அஜன் கார்டிய புஞ்சிஹேவா ஆகியோரை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.
2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற மகாவங்கி பிணை முறி ஏலத்தில் அரசாங்கத்திற்கு 600 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கு நேற்று (டிசம்பர் 19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேற்படி சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தும் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணைகளை பிறப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், இந்த வழக்கின் மற்றுமொரு சந்தேகநபரான அர்ஜூன் அலோசியஸ், மற்றுமொரு வழக்கு தொடர்பில் தற்போது சிறையில் உள்ள அர்ஜூன் அலோசியஸை அடுத்த நீதிமன்ற அமர்வில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.