பாம்பு கடித்தவர் 10 நாட்களின். பின்னர் உயிரிழப்பு.

Date:

அனலைதீவில் பம்புக்கடிக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வீடு சென்ற குடும்பஸ்தர் 11 நாட்களின் பின்பு பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இதன்போது கார்த்திகேசு இரவீந்திரன் என்னும் 47 வயதையுடைய   5ஆம் வட்டாராம் அனலைதீவுச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.

17ஆம் திகதி இரவு 7 மணிக்கு வீட்டில்  பாம்பு கடிக்கு இலக்கானவர் நோயாளர் காவு வண்டிப் படகுச் சேவையின் உதவியுடன்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்  17ஆம் திகதி  வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இவ்வாறு வீடு சென்றவர்  26 ஆம் திகதி  வீட்டில் இருந்த சமயம் திடீர் மயக்கம் போட்டு வீழ்ந்த நிலையில் மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும்  28ஆம் திகதி  அதிகாலை 4 மணிக்கு உயிரிழந்தார்.

இவரது மரணவிசாரணையை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கூறினார். 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...

ரணிலுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக்...

வங்காள விரிகுடாவில் தாழமுக்க எச்சரிக்கை

நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய...

திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? சிங்கள...