ஊழல் ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை அங்கீகாரம்

Date:

ஊழல் ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு…

15. 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தை திருத்தம் செய்தல்

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டம் அமுல்படுத்திய பின்னர் குறித்த சட்டத்துக்கு அமைய புலனாய்வு, வழக்கு தாக்கல் செய்தல், நிர்வாக ரீதியான மற்றும் நீதிமன்ற ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுக்கு கணிசமான சட்ட ரீதியான பொருள்கோடல்கள் மற்றும் தொழில்நுட்ப பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. எனவே மேற்குறித்த சட்டத்தின் சில பிரிவுகளை திருத்தம் செய்தல் மற்றும் புதிதாக சில பிரிவுகளை மேற்குறித்த சட்டத்தில் அறிமுகம் செய்வதற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது. அதற்கமைய 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் ஏற்பாடுகளை ஆய்வுசெய்து கட்டாயமாக திருத்தம் செய்ய வேண்டிய பிரிவுகள் மற்றும் உள்ளடக்கப்பட வேண்டிய புதிய பிரிவுகள் தொடர்பான விதந்துரைகள் அடங்கிய விபரமான அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஒரு ஆணையாளரின் தலைமையில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைஞர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் சிரேஷ்ட அலுவலர்களை உள்ளடக்கிய குழுவை நியமிப்பதற்கு கௌரவ ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி...

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...