இலங்கையின் முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார இன்று காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சராக பதவி வகித்த காலத்தில், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் நிதி மற்றும் வளங்களை தவறாக பயன்படுத்தியதாகவும், முறையற்ற விநியோகங்கள் மூலம் அரசுக்கு மில்லியன் கணக்கில் நட்டம் ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
