யாழ் தென்னிந்தியத் திருச்சபையின் அதிகாரங்கள் மறு அறிவித்தல் வரை மொடரேற்றரின் பொறுப்பில்

Date:

தென்னிந்தியத் திருச்சபையின் யாழ் ஆதீனத்தின் பேராயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி டானியல் தியாகராஜா அவர்கள் அண்மையில் நோயுற்றுத், தற்போது குணமாகி வரும் நிலையில், அவரின் மனைவி கலாநிதி (திருமதி) தயாளினி தியாகராஜா அவர்களால் பேராயருக்கு மூன்று மாதங்களுக்கு மருத்துவ விடுமுறை வழங்கும்படி கோரி சென்னையில் இருக்கும் தென்னிந்தியத் திருச்சபையின் சினோட்டுக்கு (Synod) எழுதப்பட்ட விண்ணப்பத்துக்கு இணங்கப் பேராயர் தியாகராஜா அவர்களுக்குக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு லீவு வழங்க சினோட் தீர்மானித்துள்ளது.

அத்துடன் பேராயர் டானியல் தியாகராஜா தானாகவோ அல்லது தன்னால் நியமிக்கப்பட்ட‌ பொறுப்பு வாய்ந்த அதிகாரியின் மூலமாகவோ திருச்சபை விடயங்களில் பணியாற்றுவதில் இருந்து தடுக்கப்பட்டிருப்பதுடன், அந்தக் காலப்பகுதியில் திருச்சபையினது நிருவாகப் பொறுப்புக்கள் யாவும் தென்னிந்தியத் திருச்சபையின் சினோட்டின் மொடரேட்டரின் பொறுப்பதிகாரியினாலேயே (Moderator’s Commissary) மேற்கொள்ளப்படும் எனவும் சினோட்டினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், தென்னிந்தியத் திருச்சபையின் மதுரை – இராமநாதபுரம் ஆதீனத்தின் பேராயராகக் கடமையாற்றும் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி எம் ஜோசேப் அவர்கள் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ் அத்தியட்சாதீனத்துக்கான மொடரேற்றரின் பொறுப்பதிகாரியாக நேற்று 30 டிசம்பர் 2021 இல் இருந்து மறு அறிவித்தல் வரை செயலாற்றுவார்.

பேராயர் டானியல் தியாகராஜா அவர்கள் மீண்டும் செயற்படுவதற்கு இயலுமான நிலையினை எய்தும் வரைக்கும் அவர் கடமை ஆற்றுவார். பேராயர் தியாகராஜா தொழிற்பட ஆரம்பித்ததன் பின்னர் மொடரேற்றரின் அதிகாரி வாபஸ் பெறப்படுவார்.

மொடரேற்றரின் அதிகாரி யாழ் ஆதீனத்தின் நிருவாகத்திற்குப் பொறுப்பாக இருக்கும் காலப் பகுதியில், அவருக்கு ஒத்துழைப்பினை வழங்கும்படி ஆதீனத்தின் அலுவலர்கள், ஆதீன சபை, ஆதீனத்தின் கமிட்டிகள் மற்றும் சபைகள் யாவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றனர்.

மேற்கூறிய விபரங்களை உள்ளடக்கிய 30 டிசம்பர் 2021 திகதியிடப்பட்ட கடிதம் மொடரேற்றரின் அதிகாரிக்கு, மொடரேற்றர் (Moderator) அதி வணக்கத்துக்குரிய தர்மராஜ் இராசாலம் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடிதத்தின் பிரதிகள் யாழ் ஆதீனத்தின் அலுவலர்களுக்கும், பேராயர் டானியல் தியாகராஜா அவர்களின் பாரியார் கலாநிதி (திருமதி) தயாளினி தியாகராஜா அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...