மரணத்தின் விளிம்பில் இலங்கை..!

Date:

மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை சமீபத்திய காலங்களில் சந்தித்து வருவதாகவும், இலங்கையின் பணவீக்கத்தை அவதானிக்கும் போது நாட்டின்  பொருளாதாரமானது மரணத்தின் விளிம்பில் இலங்கையை கொண்டு சென்றுள்ளது எனவும்  அமெரிக்க பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார். 

இலங்கையின் பணவீக்கம் தற்போது 122 வீதமாக உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர்,   சர்வதேச நாணய நிதியம் கூட இலங்கைக்கான கடன் முறையை நிராகரித்துள்ளது என்றும் கூறியுளளார்.  இதுவரை காலமாக சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை 16   வேலைத்திட்டங்களை  முன்னெடுத்துள்ளது. 

ஆனால் இலங்கை அதிகாரிகள் எவரும் அந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின்  அவதானிப்பின் படி வருடமொன்றுக்கு அதிக பணவீக்கம் விகிதம் பதிவாகிய நாடுகளின் பணவீக்க பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. 

சிம்பாபேவேவின் மிக மோசமான பணவீக்க நிலைமைகளுக்கு அடுத்த படியாக இலங்கை 122 வீத பணவீக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் காலங்களில் மிக மோசமான நிலைமைகளுக்கு இலங்கை முகங்கொடுக்க நேரிடும்  எனவும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...

நிலக்கரி கொள்முதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கை வெளியீடு

நுரைச்சோலை லக்‌விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான...

NDB விவகாரம்: இலங்கை வங்கி சூழலுக்கு கவன எச்சரிக்கை

இலங்கையின் நிதியியல் அமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நேஷனல் டெவலப்ப்மென்ட் வங்கி...