ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்: உச்சநீதிமன்றம் அறிவித்த முடிவு

0
10

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, குறித்த தீர்மானத்தை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இன்று (21) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானதாகத் தெரியவில்லை என்றும், சில திருத்தங்களுக்கு உட்பட்டு நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்தச் சட்டமூலத்திற்கு எதிராகப் பல்வேறு தரப்பினர் தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். குறித்த சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் ஆகியவற்றின் ஊடாக அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படும் அபாயம் இருப்பதாக எதிர்ப்புத் தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here