Saturday, November 23, 2024

Latest Posts

நாட்டு பிரச்சினைக்கான தீர்வு ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ளது – சஜித்

இன்று நாட்டிற்கு தேவை மக்கள் படும் துன்பத்தை புரிந்து கொள்ளும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும், புதிய தொலைநோக்கு பார்வையுடன் நாட்டைப் பற்றி சிந்திக்கும் வேலைத்திட்டமே எனவும்,ஐக்கிய மக்கள் சக்தியிடம் அந்த வேலைத்திட்டம் உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஊழல், பழிவாங்கல், மோசடி மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றை இல்லாதொழித்து, புதிய தேசமாக இலங்கையை கட்டியெழுப்ப ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நாட்டில் தகவல் தொழில்நுட்ப புரட்சியை வார்த்தைகளுக்குள் மட்டுப்படுத்தாமல் நடைமுறையில் ஆரம்பிக்க வேண்டும் என தெரிவித்த எதிர்கட்சி தலைவர், அதற்கான முதல் படியாக “பிரபஞ்சம்” திட்டம் பூர்வாங்கமாக தொடங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திறமையான இளம் தலைமுறையை உருவாக்கும் நோக்கில், டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணனி உபகரணங்களை வழங்கும் முன்னோடித் திட்டமான ‘பிரபஞ்சம்’நான்காம் கட்டம் நேற்று (04) ஆரம்பமானது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந்நாட்டின் இளைய தலைமுறையை,தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற,ஸ்மார்ட் கணனி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாக கட்டியெழுப்பும் ‘பிரபஞ்சம்’ முன்னோடித் திட்டத்தின் நான்காம் கட்டத்தில், ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா (750,000) மதிப்பிலான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை திருகோணமலை மூதூர் அல்மினா வித்தியாலயத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (04) வழங்கி வைத்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் எண்ணக்கருவாக அமைந்து செயற்படும் ‘பிரபஞ்சம்’ நிகழ்ச்சித் திட்டம் நாட்டின் பின்தங்கிய பாடசாலைக் கல்வி முறையில் கல்வி கற்கும் பிள்ளைகளின் நவீன தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.