எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தேர்தலில் எவருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாகவும், ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 பேர் ஏற்கனவே இரு குழுக்களாக பிரிந்துள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே அரசாங்கத்தில் உள்ளவர்கள், அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டின் படியே செயற்படுவார்கள்.
அதற்கமைவாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.