சுதந்திரக் கட்சியில் பிளவு !

Date:

எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தேர்தலில் எவருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாகவும், ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 பேர் ஏற்கனவே இரு குழுக்களாக பிரிந்துள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே அரசாங்கத்தில் உள்ளவர்கள், அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டின் படியே செயற்படுவார்கள்.

அதற்கமைவாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 11 சடலங்கள் மீட்பு

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 11 பேரின் உடல்கள்...

அரச வங்கியில் மூன்றரை கோடி திருட்டு

களுத்துறை - ஹொரணை நகரில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய்...

ஹொரணை முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 9 பேர் பலி

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 9 பேரின் உடல்கள்...

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தடை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி...