நுரைச்சோலையில் உள்ள மின் உற்பத்தி இயந்திரம் தேசிய மின்கட்டமைப்பில் இணைக்கப்படும்

0
218

அவசர கோளாறு காரணமாக பழுதுபார்க்கப்பட்ட நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 15 ஆம் திகதி நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் திடீரென பழுதடைந்தது.

அதன்படி, நேற்று (26) பிற்பகல் முதல் தேசிய அமைப்பில் 300 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி செய்யும் இயந்திரமும் தற்போது பராமரிப்பு பணிகள் காரணமாக செயலிழந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here