இலங்கைக்கு கனடாவின் ஆதரவு

0
147

இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து விடுபட்டு பொருளாதார ஸ்திரத்தன்மையை விரைவில் ஏற்படுத்துவதே கனடாவின் நம்பிக்கை என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கு கனேடிய அரசாங்கம் ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்று (26) பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை பொது பாதுகாப்பு அமைச்சில் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இங்கு இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் அரசியல் ரீதியாக நடந்து வரும் பொதுமக்கள் போராட்டங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன், எந்தவொரு சூழ்நிலையிலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here