தாமரை கோபுரத்தில் கேசினோ மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள்!

Date:

லோட்டஸ் டவர் நிர்வாக நிறுவனம் (LTMC) சிங்கப்பூரின் Kreate Design Pte உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு அதன் செயல்பாடுகள் ஊடாக ஆண்டுக்கு 1.4 மில்லியன் டொலர்கள் வருமானம் கிடைக்கப்பெறும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு தாமரை கோபுரத்தில் கேசினோ மற்றும் பொழுதுபோக்கு பகுதி நடத்துவது வரையறுக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை LTMC உடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, சிங்கப்பூரை தளமாகக் கொண்ட புதுப்பித்தல் மற்றும் உள்துறை வடிவமைப்பு நிறுவனம் 44,000 சதுர அடி கொண்ட கொழும்பு தாமரை கோபுரத்தின் கோபுர தளத்தின் ஒரு தளத்தை குத்தகைக்கு பெற்றுக்கொள்ளும்.

உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, ​​சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, இந்த முதலீடு மற்றும் அனைத்து அம்சங்களின் ஊடாகவும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாமஸை கோபுரம் ஈட்டும் எனவும் கூறினார்.

தாமரை கோபுரத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் முழு அளவிலான சூதாட்ட விடுதி மற்றும் நீர் விளையாட்டு உள்ளிட்ட பொழுதுபோக்கு பகுதிகள் உருவாக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...