ரணில் ஜனாதிபதியான பின் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0
145

ரணில் விக்கிரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அதீதமாக அதிகரித்துள்ள பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தற்போது குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியை அண்மித்த வெலிகம்பொல பிரதேசத்தில் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து மக்களுக்கு அறிவிக்கும் வகையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அளுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியை முன்னேற்றுவதற்கோ, அக்கட்சியின் அங்கத்துவத்தை அதிகரிப்பதற்கோ செயற்படாமல் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசைகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த இரண்டரை வருடங்களில் நாட்டின் பொருளாதார நிலைமையை மேம்படுத்த தற்போதைய ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் எனவும் அளுத்கமகே தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here