ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து விரைவில் இறுதி தீர்மானம்!

Date:

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை ஒரு முதலீட்டாளருக்கு வழங்குவதா அல்லது தனித்தனியாக வழங்குவதா என்பது குறித்து விரைவில் இறுதித் தீர்மானம் எடுக்கும் என துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான வழிகாட்டல்களை திறைசேரியின் குழுவொன்று வழங்கும் என்றும் அதன் பின்னர் அமைச்சரவை இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதனை மறுசீரமைப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை முதலில் பாராளுமன்றத்திற்கு தெரிவிப்பதாகவும் பெருந்தொகையில் நட்டத்துடன் இயங்கும் ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறிய அமைச்சர், நிறுவனத்தை மறுசீரமைப்பதை தேசிய மக்கள் சக்தி மட்டுமே எதிர்க்கிறது என்றார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் நூறு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கடன்பட்டுள்ளதாகவும், விமான சேவைக்கு சொந்தமான அனைத்து விமானங்களும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில் 51 சதவீத பங்குகளை அரசாங்கத்திடம் வைத்து விமான நிறுவனம் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை

இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.  நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில்...

சஜித் தலைமையில் அவசர கூட்டம்!

எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் நேற்று (21)...

களு கங்கை ஆற்றைச் சுற்றி வெள்ள நிலை

இன்னும் சில மணி நேரங்களுக்குள் களு கங்கை ஆற்றைச் சுற்றிய பகுதிகளில்...

மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை ரூபாய்!

மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன்...