பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையிலுள்ள தேவாலய வளாகத்திலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் ரஜித்ரா ஜயசூரிய முன்னிலையில் சந்தேகநபரை இன்று ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
தெமட்டகொட பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருடன் தொடர்புகளை பேணியுள்ளதாகவும் கைக்குண்டை தேவாலய வளாகத்திற்குள் வைத்தமையுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மேலும் மூன்று சந்தேகநபர்களை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.