இந்திய கடற்படை தளபதி இலங்கைக்கு விஜயம் ; திருமலைக்கு செல்வார்!

Date:

இந்தியாவின் கடற்படைத் தளபதி (CNS) அட்மிரல் ஆர்.ஹரி குமார் டிசம்பர் 13-16 வரை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார்.

டிசம்பர் 15ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ள கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் (NMA) அணிவகுப்புக்கு பிரதம அதிதியாகவும், மீளாய்வு அதிகாரியாகவும் அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, அட்மிரல் ஆர் ஹரி குமார் இலங்கையின் மூத்த அரசியல் மற்றும் பாதுகாப்புத் தலைமைகளுடன் சந்திப்புகளை நடத்தவுள்ளார். அவர் இலங்கை ஆயுதப் படைகளின் ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் விஜயம் செய்வார் மற்றும் பல்வேறு இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை...

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...

விமல் இன்று கைதாகக் கூடும்

பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள ரணவிரு நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் (18)...

வரி உயர்வதற்கு முதல் நாள் 4000 வாகனங்கள் இறக்குமதி? பல கோடி மோசடி

வாகன இறக்குமதியில் சுங்க இறக்குமதி வரியை 50% உயர்த்தும் வர்த்தமானி அறிவிப்பு...