குளத்தில் மூழ்கி 14 வயது சிறுவன் பரிதாப மரணம்!

Date:



குளத்தில் குளிர்த்த சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் செவனகல, கட்டுபில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குடும்பச் சுற்றுலாவாக அப்பகுதிக்கு வந்திருந்த குடும்ப உறுப்பினர்கள் பலர் குளத்தில் நீந்திக் கொண்டிருந்த போது, குறித்த சிறுவன் திடீரென நீரில் மூழ்கினார்.

அவர் மீட்கப்பட்டு தண்டும வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

பெல்மடுல்ல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் செவனகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அனுரவிடம் சஜித் விடுத்துள்ள அவசர கோரிக்கை

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட எதிர்கட்சி தலைவர்...

இன்றும் மழை நீடிக்கும்

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

IMF கடன் கிடைத்த கையோடு விலை கிடுகிடுவென உயரும்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) கடன் தவணைகளான இரண்டையும்...

SJBயிடம் தோல்வியுற்ற NPP

ஹிரியால பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் சபையைத் தேர்ந்தெடுக்க இன்று...