தேசிய அரசாங்கம் அல்ல, தேர்தலே வேண்டும் – SJB

0
144

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம் பாராளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் ஒன்றுக்கு முன்னர் நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் அதற்காக வழமை போன்று தேர்தல்களை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தால் மக்கள் சலிப்படைந்துள்ளதாகவும், மக்கள் வேறு ஒரு அரசாங்கத்தை நியமிப்பதற்கு தேர்தலை நடத்துமாறும் கேட்கின்றனர் எனவும் அவர் கூறுகிறார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here