மே தின பேரணி, கூட்டங்களுக்கு பிரதான கட்சிகள் தயார்

0
189

நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் தமது மே தின கூட்டம் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை நிறைவு செய்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின நிகழ்வுகளை பொரளை கெம்பல் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பிற்பகல் 2.00 மணிக்கு மே தின நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு ஏ.ஈ.குணசிங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் மே தின பேரணி இம்முறை பி.ஆர்.சி. மைதானத்திலிருந்து ஆரம்பமாகி விஹார மகா தேவி பூங்காவை சென்றடைந்து, அந்த பூங்காவுக்கருகில் மே தின கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மே தின கூட்டத்தை கண்டி பொதுச் சந்தைக்கு முன்பாக நடத்த திட்டமிட்டுள்ளது

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here