ஊவா – கிழக்கு இணைந்த அபிவிருத்தி – இரு மாகாண ஆளுநர்கள் இடையே முக்கிய சந்திப்பு

0
272

ஊவா மற்றும் கிழக்கு இணைந்த அபிவிருத்தி குறித்து இரு மாகாண ஆளுநர்கள் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஊவா மாகாண ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் செய்த கிழக்கு  மாகாண  ஆளுநர் செந்தில் தொண்டமான் ஊவா மாகாண ஆளுநர் முஸம்மிலை சந்தித்து கலந்துரையாடினார்.

கிழக்கு மாகாணத்திற்கும் ஊவா மாகாணத்திற்கும் இடையிலான சுற்றுலா, கைத்தொழில், கல்வி ஆகிய இருதரப்பு வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாக இதன்போது கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவாவை அண்மித்த மாகாணங்களின் எல்லைப் பிரச்சனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், அரசாங்க உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பில் விரிவான கலந்துரையாடலுக்கு கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யுமாறு ஊவா மாகாண ஆளுனர் முஸம்மில், பிரதம செயலாளர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here