மலையேறச் சென்று காணாமல் போன டென்மார்க் பெண் மர்மமான முறையில் மரணம்

0
171

கடுகன்னாவ பிரதேசத்தில் மலையேறச் சென்ற 32 வயதுடைய டென்மார்க் சுற்றுலாப் பெண்ணொருவர் ஜூலை 10ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கண்டி சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி, குறித்த வெளிநாட்டுப் பெண்ணின் சடலம் அலகல்ல மலைத்தொடரில் இருந்து இன்று (14) சிங்கப் படையணியில் (11வது பிரிவு) இணைக்கப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் குழுவினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் மலையேற்றம் செல்வதாக கூறிய பகுதியில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மலை ஏறச் செல்வதாகக் கூறி ஹோட்டலில் இருந்து வெளியேறிய வெளிநாட்டுப் பெண் மீண்டும் விடுதிக்கு வரவில்லை என விடுதி உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here