ஊவா, கிழக்கு மக்களின் உயிர்காக்க ஆளுநர் செந்தில் எடுத்த முயற்சிக்கு வெற்றி

Date:

சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பல இலட்சம் பெறுமதியான இயந்திரங்கள் திருக்கோணமலை கந்தளாய் வைத்தியசாலை மற்றும் பதுளை வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் முயற்சியில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐ.ஓ.சி நிறுவனத்தின் தலைவர் தீபக் தாஸிடம் கிழக்கு மாகாண ஆளுநர் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரம் பெறுமதியான இந்த உயிர்க்காக்கும் சிறுநீரக இயந்திரம் (Dislysis) பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இயந்திரங்களை கையளிக்கும் நிகழ்வு திருகோணமலை ஐ.ஓ.சி தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்மூலம் பதுளை, கந்தளாய் ஆகிய இரண்டு வைத்தியசாலைகளிலும் சிறுநீரக சிகிச்சைகளுக்காக செல்லும் நோயாளர்களின் உயிர்கள் எதிர்காலத்தில் பாதுகாக்கப்படும்.

இலங்கையில் சிறுநீரக நோயாளர் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில் ஆளுநர் செந்தில் தொண்டமானின் முயற்சியால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்கள் குறித்த பிரதேசங்களில் உயிரிழப்புகளை குறைவடை செய்யும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...