வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு

Date:

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்சார் நடவடிக்கை இன்று (03) வடமாகாண வைத்தியசாலைகளில் அமுல்படுத்தப்படவுள்ளது.

ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று (02) அமுல்படுத்தப்பட்டது.

இதன்படி, வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளை மையப்படுத்தி இன்று 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு மாகாணத்தில் எதிர்வரும் 6ஆம் திகதி சப்ரகமுவ மாகாணத்திலும், 7ஆம் திகதி சப்ரகமுவ மாகாணத்திலும் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இந்த வேலை நிறுத்த நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக அமுல்படுத்தப்பட உள்ளன.

வரிச் சுமை, வாழ்க்கைச் செலவு, சுகாதார நெருக்கடி, மின்சாரக் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...